Happy Birthday

வசந்த்  அண்ணாவுக்கு இன்னைக்கு 16- வது பிறந்த நாள்........





மேலே உள்ளவை ஆறிலிருந்து பதினாறு வரையிலும் உள்ள புகைப்படங்களே....

முதன் முதல்ல...

நாமும் பதிவு எழுத வேண்டும் என்று நீ................ண்ட நாட்களாக (287 நாட்களாகத்தான்) எண்ணம்....

ஆனால் அதற்கென்று நேரம் ஒதுக்குவதில்தான்  சற்று சிக்கல் (நிறையவே)....

ஒரு வழியாக உட்கார்ந்து ரூம்போடாத குறையாக யோசித்து எழுதிய பதிவு.




* முதன் முதல்ல பள்ளிக்கூடத்த ஆரம்பிச்சது யாருங்க...?

* முதன் முதல்ல எந்த ஸ்டூடன்ட்   ஹோம் வொர்க் செய்யாம வாத்தியார்கிட்ட அடி வாங்கியிருப்பான் .....?

* முதன் முதல்ல அசைன்மென்ட் எழுதிட்டு வரச் சொன்ன வாத்தியார் யாருங்க..?

* முதன் முதல்ல அரியர் வச்ச மஹா புண்ணியவான் யாரா இருப்பாங்க ..?

* முதன் முதல்ல பிட் அடிச்சு பாஸ் பண்ணினது யாரா  இருக்கும்..?

*  முதன் முதல்ல பிட் அடிச்சு மாட்டிகிட்டது யாராக இருக்கும்..?

*  முதன் முதல்ல காதலியை நினைச்சு கவிதை எழுதிய காதலன் யாராக  இருக்கக்கூடும் ...?

*  காதலித்து சேராமலே பிரிந்த முதல் காதலர்கள்..?

 *  காதலித்து கைபிடித்த  முதல் காதலர்கள்..?

* பேச்சுலர்க்கு வீடு வாடகைக்கு இல்லைன்னு சொன்ன முதல் ஹவுஸ் ஓனர் யாரு..?

* அப்படியே ஒருவேளை வீடு கொடுத்தாலும் அதுவரையிலும் முன்னூறு ரூபாய்க்கு கூட தேறாத வீட்டை மூவாயிரம் ரூபாய்க்கு குடுத்த ஹவுஸ் ஓனர் யாராக இருக்கும் ...?

* வாடகைக்கு வீடு எடுத்து, அதை நாறடிச்சு ஹவுஸ் ஓனரால  விரட்டப்பட்ட பேச்சுலர் யாரு...?


* முதன் முதல்ல தமிழ்ல பதிவு எழுதின பதிவர் யாருங்க...? (நீங்களா இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.)

* முதன் முதல்ல பதிவுகளில்  மொக்கை போட ஆரம்பிச்ச பதிவர் யாரோ....?

* ஆபிஸ் நேரத்துல பேஸ்புக்ல மூழ்கி கிடக்கறதும், மொக்கை பதிவை படிக்கறதும் கமென்ட் போடறதுமே வேலையா செஞ்சுட்டு  ஆபிசை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட அப்பாவிங்க யாரும் இருக்கின்றார்களா....? (சத்தியமா நான் இல்ல.ஏன்ன நான் வொர்க்ல   ரொம்ப சின்சியர் ..)

இப்போதைக்கு என்னோட சந்தேகங்களை எல்லாம் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கிறேன்.. ஏன்னா நீங்க இதுக்கெல்லாம் பதிலை ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கணுமா இல்லையா..?

இப்படிலாம் சந்தேகம் வந்ததுக்கு முக்கிய காரணம்:
இப்ப உள்ள பேச்சுலர்ஸ் நிறைய பேர் இதனால பாதிக்கப் பட்டுருப்பாங்க...... 
இதுலாம் யார்னு தெரிஞ்சா... ( அவங்களை என்ன செய்யணுமோ அது அவங்க அவங்க இஷ்டம்பா ...)




ஜனவரி - 26



நாளைக்கு குடியரசு தினமாச்சே ... நமது நண்பர்களுக்கெல்லாம் குடியரசு தின வாழ்த்து அனுப்பலாமேனு மெயில திறந்து பார்த்தப்போ.....
என்னோட மெயிலுக்கு  முன்னமே வந்திருந்தது கீழே இருக்கற வாழ்த்துச் செய்தி......
அது அப்படியே உங்களுக்கும்........


இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,
 
 
1 டீ - ரூ 1.00
 
சூப் - ரூ 5.50
 
தால் - ரூ 1.50
 
 மீல்ஸ் - ரூ 2.00
 
சப்பாத்தி - ரூ 1.00
 
சிக்கன் - ரூ 24.50
 
தோசை - ரூ 4.00
 
வெஜி.பிரியாணி - ரூ 8.00
 
மீன் - ரூ 13.00
 
 
இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான்.  

 


அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம்.  
அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும்  
தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில்  
ஏராளமான சலுகைகள்
 
              வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா

    
ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.......
எல்லோருக்கும்  

                    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்