பெற்றதுதான் பாவமா..?

சமீபத்தில் ஒரு பெரியவரை பணியில் சேர்ப்பதற்காக, எங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஒரு சகோதரி அழைத்து வந்தார்...

அவரது  சொந்த ஊர் ஊட்டி. 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்....அவருக்குச் சொந்தமாக அங்கே எஸ்டேட் எல்லாம் இருந்ததாம்....மகன்களுக்கு திருமணம்
ஆனதும் இவர்களை  சரியாக கவனித்துக் கொள்வதில்லை...அவரது  மருமகன்களும் சரியாக அமையவில்லை...

எனவே அவரும் ,அவரது மனைவியும்   தற்போது ஆளுக்கொரு மகள்களின் வீட்டில் இருந்து தங்களின் மகளுக்கு தங்களால் ஆன உதவியைச் செய்து கொண்டிருக்கின்றார்களாம்.

மகன்கள் அவர்களை கண்டு கொள்வதே இல்லை.இவர்களும் அவர்களிடம்
எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை.... இத்தனைக்கும் அவர் அங்கே தலைமை
ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கின்றார். மகள்களுக்கு
பணத்தேவை இருந்ததாம். அதனால் தானாகவே விருப்ப ஓய்வு பெற்று
அதில் வந்த பணத்தினை கொடுத்திருக்கின்றார்.

தற்போது வேலைக்காக அழைத்துவந்த எங்கள் நிறுவனத்திலிருந்த சகோதரியின் வீட்டருகேதான் இவரது மகள் வீடும்.

இங்கே Purchase வேலைக்கு ஆள் தேவை இருந்தது. எனவே அந்த பணிக்கு அவரை அமர்த்திக் கொண்டனர்...
 
எங்கள் நிறுவனத்திற்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வர 
எவ்வளவு தூரமென்றாலும் சைக்கிள்தான் உபயோகிக்க வேண்டும். 
பெட்ரோல் விலை உயர்வினால்தான் இது போன்றதொரு திட்டம்.

எங்கள் நிறுவனமும் எங்கள் MD-யின் வீடும் ஒரே பில்டிங்கிலேயே உள்ளது.
கொடுமை என்னவெனில் வீட்டிற்கு சமையலுக்கு கருவேப்பிலை தேவைப்பட்டால் கூட
MD-யின் மனைவி இவரைத்தான் கடைக்கு அனுப்புவார்..... இவ்வளவுக்கும் கடை 5  வீடுகள் தள்ளிதான் உள்ளது. வீட்டிலும் அவரது பையன்கள் கூட இருக்கின்றார்கள்.

வயதில் பெரியவர் என்ற மரியாதையும் இருக்காது. ஒரு ஆசிரியராக இருந்தவர் என்றுகூட நினைப்பதில்லை.  அவர்கள் இதுபோன்ற வேலை சொல்லும்போது அவரது முகத்தில் தெரியும் வேதனை அளவிட முடியாதது. 

பெற்ற பிள்ளைகளுக்காக எத்தனை காலம்தான் இப்படி கஷ்டப்படுவது....??

கடைசிக் காலத்தில் அவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்து கொடுக்க வேண்டிய பிள்ளைகளே அவர்களுக்கு பாரமாகி விடுகின்றார்கள்... !!

அப்புறம் முதியோர் இல்லங்கள் பெருகத்தான் செய்யும்....!!?!

பெற்றவர்கள் மனதை கஷ்டப் படுத்திவிட்டு அவரது மகன்களால் எப்படி சந்தோசமாக வாழ முடிகிறது என்றுதான் தெரியவில்லை........