தமிழ் வளர்ப்போம் .

என் இனிய தமிழ் மக்களுக்காக ,
வசந்த் அண்ணாவின் வழியில்  தமிழ் வளர்க்க
நாமளும் நம்மால் ஆனத செய்யணும்னு  ரூம் போடாத குறையா யோசிச்சப்ப....

நம்மோட கூட பிறக்காத உடன்பிறப்பான
கணிப்பொறி தொடர்பான பொருட்களை தமிழ் படுத்தலாமேன்னு
ஆங்கில அகராதிய கஷ்டப்பட்டு புரட்டி கண்டுபிடிச்சது....

Mother Board




PenDrive :-



CD Drive:



Hard Disk


Monitor:

Mouse:



இன்னும்  நிறைய சொல்லனும்னா இதெயெல்லாம் படிச்சு என்கிட்டே மனப்பாடம் பண்ணி சொன்னா மட்டும்தான்.....

(எங்களைலாம் ஏமாத்த முடியாது...)

Click Me!


சுதந்திர தினத்தை நினைவு கூறுவோம்

 









தாயின் மணிக்கொடி பாரீர்...
அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்..  
தாயின் மணிக்கொடி பாரீர்...

ஆகஸ்ட்-15

இந்த சுதந்திர தினத்தன்று , குழந்தைகளுக்கு ஞாயிற்றுக் கிழமையில் கூட விடுமுறை இல்லாமல் சீருடையை அணிந்துகொண்டு பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்...

அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு , இந்த ஆகஸ்ட் 15  ஞாயிற்றுகிழமை இல்லாமல் வேறு கிழமையில் வந்திருக்கக் கூடாதா ஒரு நாள் விடுமுறையாவது வந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு.

நான் ஐந்தாம் வகுப்பு வரையிலும் எங்கள் ஊரிலேயே உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன்.. அதன்பிறகு மேற்படிப்புகளுக்குதான் (.?) கிறிஸ்துவப் பள்ளிகளின் வாசம்

அப்போதெல்லாம் பள்ளியில் கொடி ஏற்றி அங்கே சாக்லேட் வாங்கியதும் பக்கத்திலுள்ள  அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓடுவோம்...

ஏனென்றால் அன்று மட்டும்தான் அந்த மாளிகைக்குள் எல்லோரும் உள்ளே நுழைய முடியும். மற்ற நாட்களில் சம்பந்தமில்லாதவர்கள் யாரும் செல்ல முடியாது.
உள்ளே ஒரு அழகான பூங்காவினைப் போல் இருக்கும். சில்லென்ற காற்றும், பசுமையும் ஏதோ வேறு பிரதேசம் வந்தது போல தோன்றும்....

இரண்டாவது காரணம் அங்கு எங்கள் பள்ளியில் கொடுத்ததை விட பெரிய பெரிய சாக்லேட்டுகளை கொடுப்பார்கள்.
இப்படி சின்ன வயதிலிருந்தே சுதந்திர தினம் என்றால் சாக்லேட் இலவசமாக கொடுக்கப் படும் நிகழ்வாகவே நம்மில் பலருக்கும் எண்ணம்.

அன்றைய தினம் மட்டும் பள்ளிகளில் நமது நாட்டின் விடுதலைக்காக பாடு பட்டவர்களை நினைவு கூறுவார்கள்.

கீழ்வகுப்புகளில் ஒரு பாரதியார் பாடலும், கொடிகாத்த குமரனைப் பற்றி ஒரு பாடமும் நாம் சுதந்திரம்   வங்கியதை ஞாபகப் படுத்த வைக்கப் பட்டிருக்கும்.


பொதிகை தொலைகாட்சியில் ரோஜா திரைப்படத்தினை மறுபடியும் ஒளிபரப்புச் செய்வார்கள்...

மற்ற டிவிக்களில்
இன்றைய சுதந்திர தின சிறப்பு  நிகழ்சிகள் அனைத்தையும் வழங்குபவர்கள்
யார் யாரென  ஸ்பான்சர்களை மட்டும் விளம்பரப் படுத்தி நமக்கு சுதந்திர தினத்தை நினைவு படுத்துவார்கள்

சுதந்திரப் போராட்டத்திலே கலந்துகொண்டு உயிரினைத் துறந்தவர்கள் ஏராளம்.
ஆனால் நமக்கு தெரிந்ததோ சிலருடைய பெயர்கள் தாம்...

ஆனால் அவர்களுக்காவது நாம் உரிய மரியாதையினைத் தருகின்றோமா என்பதுதான் கேள்வி.? 
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகள் இன்னும் பலர் நம் நாட்டில் இருகின்றார்கள்...

அவர்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அரசு அளிக்கும் உதவித் தொகையினைக் கூட பெற இயலாதவர்கள் எத்தனையோ பேர் இருகின்றார்கள்....

இங்கே 

இங்கே

க்ளிக்கி பாருங்கள்...

இதைபோல் நிறைய விஷயங்கள் வலையில் உள்ளன.

எது எப்படி இருந்தாலும் சரி....

அன்றைய தினமாவது நாம் நமது சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்கூட போதுமானதே.

டிஸ்கி:
 எங்க கம்பனில இன்னைக்கே சுதந்திர தினத்துக்காக சாக்லேட் கொடுதுட்டாங்கப்பா.  நாளைக்கு விடுமுறைங்கறதால. 


http://www.bringmeasandwich.com/images/CadburyDairyMilkTreatwisefrontrgb.jpgஇதே சாக்லேட்தான்.....


எல்லோரும் கோரசா  வந்தே மாதரம் பாடுங்க......

                            


 ஜெய் ஹிந்த் .



டிஸ்கி:

மேல உள்ள கொடி இங்கருந்து சுட்டது. வசந்த் அண்ணா ப்ளாக்க பார்த்து...

ஒரு நாளு..... ஒரு ஊர்ல...

ஒரு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பான பையனோட ஒரு நாள் பொழுதைப் பாருங்களேன்.

காலைல 10 மணிக்குலாம் சீக்கிரமே எழுந்து மேக் அப் பண்ணிக்கிட்டு சென்ட் அடிச்சுகிட்டு  (குளிக்காதத மறைக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கு )   கிளம்பி போறாரு...


காலைலேர்ந்து எத்தனை பேர சமாளிக்க வேண்டி இருக்குனு பாருங்களேன்..

10 மணிக்கு :

திருமலை நாயக்கர் மஹால் பக்கமா ஒதுங்குராறு ..எதுக்குனு பார்த்தா....?


ஒரு 12  மணி வாக்கில..

ஆசியாவுலேயே ரொம்ப பெருசான  தங்கம் தியேட்டருக்கு போறாரேன்னு  பார்த்தா

அங்க.....வித்அவுட்ல வந்து படம் பாக்க யார் கூட வந்திருக்கார்னு பாருங்களேன்...


படம் விட்டதும் பக்கத்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வேகமா ஓடி போயி அங்க 7C பஸ்ல ஏறி மாட்டான்பட்டிக்கு ஒரு டிக்கெட்னுலாம்  கேட்கல. அங்கயும் வித் அவுட்தாங்க..
ஒரு வழிய வந்து இறங்கி....
என்னனு பார்த்தா அந்த ஊர்ல


கோவில் திருவிழாங்க.....
இன்னும் காலைலேர்ந்து சாப்பிடல.. பசி வயித்த கிள்ளது....! ஆங்...என்ன பண்றது.....


ஹோய்......எடத்த  பிடிங்கடா....எடத்த  பிடிங்கடா...


அடுத்து....
காரணம் இல்லாம நம்மாளு இவ்ளோ தூரம் வருவாரா....


இதுக்குதான்.  இதுக்குதான். இதுக்குதாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது. ....
சரி அடுத்த ஆட்டத்துக்கு போவோமா....!



சட்டைலாம் கலர் கலரா போட்டுக்கிட்டு
தாமிரபரணி தண்ணி குடுச்சு நான் வைகையிலே குளிச்சு வளந்தவன்னு
ஸ்டில்லப் பார்த்தீங்களா...!

நம்ம ஆளு இப்டி சுத்துறது கடைசில தெரிஞ்சு போச்சு.......


ஐயையோ காப்பாத்துங்க...காப்பாத்துங்க.........

 இந்த கதையின் கருத்து:

(இதுக்கு பேரு கதை , இதுக்கு கருத்து வேறயானு கேட்கப் படாது...) 

 பாருங்க...இவ்ளோ நடந்திருக்கு.நம்ம பையன் மாறவே இல்ல.
பொண்ணுங்க மட்டும்தான் வரிசையா மாறிகிட்டே இருக்காங்க.

So ............

பசங்க எப்பவும் மாறுரதே இல்லேங்க. ...இந்த பொண்ணுங்கதான்........?

(பொண்ணுங்க யாரும் கல்ல விட்டு என்ன எறியனும்னு நினைச்சா,  எனக்கு இந்த concept- sms பண்ணுன அந்த புண்ணியவான எறிஞ்சுக்கோங்கோ..வ்.....)

நாற்காலிக்கு சண்டை போடும் ..........

எங்க கம்பனில நேத்து ஒரு டிபார்ட்மெண்டுக்கு சும்மா உட்கார்ந்து தேய்க்கிறதுக்கு நாற்காலி  கம்மியா இருக்குனு சொல்லிட்டு  புதுசா நாலு நாற்காலி  வாங்கிட்டு வந்தாங்க.

கடை பேரு பார்த்தீங்களா... ...


ஆனா வாங்கிட்டு வந்ததும் நம்ம வெட்டி ஆபிசருங்க இருக்காங்கல்ல , புது நாற்காலி வந்திருக்குப்பானு ஆளாளுக்கு அதில உட்கார்ந்து அலப்பறை பண்ணிட்டு இருந்தானுக...
வந்த அன்னைக்கே அந்த நாற்காலி நஞ்சு பிஞ்சு போற அளவுக்கு அத கொடுமை படுத்துனானுங்க.

கடைசியா ஒரு VAO வந்தாருங்க.

அப்பதான் நம்ம பீமா வேலையா காட்டிட்டார்.....

  

அப்புறம் என்ன......

கெக்கே..! பிக்கேதான்.......!!!!!!

 இப்படி கெக்கே..! பிக்கே எல்லாம் எங்க MD  இல்லாதப்பதாங்க....