வரவேற்கின்றேன்...புது வருடத்தை

உங்கள் எல்லாரையும் போலவே பலவற்றிற்காக பலத்த நம்பிக்கையுடன் 
 வரவேற்கின்றேன் இந்த புதிய வருடத்தை..........

                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.....ஆமென்....

               சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது உள்ளத்தில் தோன்றினவைகள்..
நேரத்தினை சரியாக பயன்படுத்தாமையினால் கொஞ்சம் தாமதமாக இந்த பதிவு..........
 நாங்கள் ஹிந்து குடும்பம் என்றாலும் எனது சகோதரிகள் மற்றும் சகோதரன், நான் எல்லோரும் படித்து எல்லாமே கிறிஸ்துவப் பள்ளிகள்தான்.....(அதனாலதான் இப்படி அநியாயத்துக்கும் நல்லவனா இருக்கேன்...) 

         அதனால எங்களுக்கும் கிறிஸ்துவிற்கும் கூட நெருங்கிய சொந்தம் உண்டுன்னுலாம் பொய் சொல்லவில்லை...... ஆனால் பெரும்பான்மையான எங்களது நண்பர்கள் வட்டாரம் எல்லாம் கிறிஸ்துவர்கள்தான்.........

          ஹாஸ்டலில் படிக்கும் போது கிறிஸ்துமஸ் அரையாண்டுதேர்வு விடுமுறையில்தான் வரும்.... (இப்போ எங்க கம்பெனில இந்த விடு முறையெல்லாம் விட மாட்டேன்கறாங்கப்பா...!!!!)

          அனைத்து தேர்வுகளையும்  எழுதி முடித்ததும் மறு நாளில் இருந்து விடுமுறை ஆரம்பிக்கும்.... அன்று இரவு எங்கள் விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்....
அப்பொழுதான் எங்களுக்கு நாடகம் நடிக்க கான்செப்ட் கொடுப்பார்கள்... முழுதாக ரெண்டு மணி நேரம் கிடைக்கும் எங்களுக்கு.. அதற்குள் விடுதியை அலங்கரித்து கிறிஸ்துமஸ் மரம் நட்டு குடில் உருவாக்கி அதில் பெத்லகேமினையே கொண்டு வந்துவிடுவோம்....
          ரெண்டு மணி நேரத்தில் எங்களை தயார் படுத்திக் கொண்டு  நான்கு மணி நேர program செய்து விடுவோம்.... அன்று அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுப்பார்.... கேக்குகளை நண்பர்களின் முகத்தில் பூசி அட்டூழியம் செய்வோம்.. அன்று மட்டும்தான் எங்களால் விடுதியில் அப்படி நடந்து கொள்ள முடியும்.

            மற்ற நாட்களில் அந்த இடத்தில் விடுதி இருப்பதற்கு அடையாளமே இருக்காது... அவ்வளவு அமைதியாக இருக்கும்.ஏதோ பெரிய கட்டிடங்களாக  இருகின்றதே என்று பார்த்தால்தான் உண்டு..ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பிரம்புகள் பிய்ந்து போகும் .
 பள்ளிப் படிப்பினை முடித்த பிறகு அதுபோன்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே வந்து போயின.....

 http://www.travel247.tv/india/wp-content/uploads/2010/09/Oriyur-Ramanathapuram.jpg
 (நான் படித்த  ஊரிலுள்ள சர்ச்..புனித அருளானந்தர் திருத்தலம்...ஓரியூர்.)

           சில விஷயங்கள் அந்த மதத்திலே எனக்கு நிரம்பவும் பிடிக்கும்....
ஹிந்து மதத்தில் யாரேனும் இறந்து விட்டால் அந்த வீட்டுக்காரர்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவில் நிகழ்சிகளில் கூட கலந்து கொள்ளக் கூடாது. திருநீறு  வைக்க கூடாது.....
                  ஆனால் கிறிஸ்தவத்திலே  அப்படி இல்லை.  இறந்தவர்களின் உடலை ஆலயத்திற்க் குள்ளேயே  எடுத்துச் சென்று ஆண்டவரின் முன் வைத்து அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பார்கள். அந்த ஊர்காரர்கள் அனைவரும் அந்த இறந்தவரின் குடும்பத்தில் மன ஆறுதல் கிடைக்க ஆலயத்தில் சிறப்பு திருப்பலி செய்வார்கள்....
 
                          ஹிந்துக் கோவில்களில் ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர்  வந்துவிட்டால் அவருக்கு சிறப்பு தரிசனம் செய்ய வாய்ப்பு.... இதே எந்த சர்ச்சிலும் எவ்வளவும் பெரிய அதிகாரியாக இருந்தாலும் குறிப்பிட நேரத்திற்குத்தான்  திருப்பலி வைப்பார்கள்.  அதிலும்கூட எல்லா பொதுமக்களும் ஒன்று சேர்ந்துதான் பிரார்த்திப்பார்கள்...
அவர்கள் கிறிஸ்துவை தரிசிக்க வரிசையில் நிற்கத் தேவை இல்லை....சரியான நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு அவர்களது வேலையியோ கவனிக்கச் சென்றுவிடுவார்கள்.....

    ஆனால் கோவில்களிலோ அப்படி இல்லை... வரிசையில் நின்று ஒவொருவராக அர்ச்சகர் மந்திரம் சொல்லி திருநீறு வழங்கி முடிப்பதற்குள் கடவுளே கூட ஓய்வு எடுக்க கயிலை மலைக்கு சென்றுவிடுவார்......(என்ன கொடுமை சார் இது...)

தேவாலயத்தில் பாதிரியார் முன்னூறு இறைமக்களுக்கு கூட பதினைந்து நிமிடத்தில் அப்பத்தினை வழங்கி விடுகின்றார்...
ஆனால் நமது கோவில்களில் முப்பது பேர் திரு நீர் வாங்குவதற்குள் இரண்டு முறை நடை சாத்தி வேறு திறப்பார்கள். முப்பது பேரும் வழங்கும் தட்சணைகளை அர்ச்சகர்கள் தாங்கள் இடைக்கச்சையில் செருகவே சற்றுக் காலம் பிடிக்கும்....
இங்கே எந்த பாதிரியாருக்கும் அப்பம் வழங்கும் போது அவருக்கு மக்கள்S டிப்ஸ்  கொடுத்து நான் பார்த்ததில்லை..
இது போல நிறைய பேசிக் கொண்டே சென்றால் கடைசியில் மதக் கலவரத்தை தூண்டுகிறேனோ என்று கூட தோன்றினாலும்  தோன்றும்....

அந்த மதத்திலுள்ள நல்ல விசயங்களை எடுத்துக் கொள்ளலாமே என்பதுதான் என் விருப்பம்......மற்றபடி nothing.......
படிங்க... ஒரு சின்ன பையன் ஏதோ புலம்பிருக்கான்னு  நினச்சு இதோடு மறந்துட்டு போயிடுங்க...... Don 't Get be Seriously ... 

பிதா  சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே..... ஆமென்....

நெத்திலிக் கருவாடு

மீன்குழம்பு பிடிக்காதவர்களும் இதைச் சுவைக்கலாம்......




அம்மா என்ன சொல்லிருப்பாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா......?
சரியாய் சொல்றவங்களுக்கு ஒரு................ 
(சஸ்பென்ஸ்...... இப்ப சொல்லமாட்டேன்பா..)
                     


                     

கவிதைப்பூ... அட கவிதையப்பு.....

 சில நாட்களாக கண்களில் ஒரே கவிதைகளாக தட்டுப்படுகின்றன.
நல்ல கவிதைகள் நிச்சயமாக எல்லோர் மனதிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது உண்மைதானே.....

நான் சமீபத்தில் படித்தவைகளில் என்னை ஈர்த்த கவிதைகள் சில ...

( ஆனந்த விகடனில்  இருந்து அறுவடை செய்தவை இவை......
இமேஜ் Google ஆண்டவரிடமிருந்து....)







மேலும்  பல கவிதைகளைப் படிக்க  இங்கே   மற்றும்    இங்கே  கிளிக்கவும்... 

நல்ல கவிதைத் தளங்கள் இருந்தால் எனக்கு தாருங்களேன் அவற்றின் முகவரிகளை...



பெற்றதுதான் பாவமா..?

சமீபத்தில் ஒரு பெரியவரை பணியில் சேர்ப்பதற்காக, எங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஒரு சகோதரி அழைத்து வந்தார்...

அவரது  சொந்த ஊர் ஊட்டி. 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்....அவருக்குச் சொந்தமாக அங்கே எஸ்டேட் எல்லாம் இருந்ததாம்....மகன்களுக்கு திருமணம்
ஆனதும் இவர்களை  சரியாக கவனித்துக் கொள்வதில்லை...அவரது  மருமகன்களும் சரியாக அமையவில்லை...

எனவே அவரும் ,அவரது மனைவியும்   தற்போது ஆளுக்கொரு மகள்களின் வீட்டில் இருந்து தங்களின் மகளுக்கு தங்களால் ஆன உதவியைச் செய்து கொண்டிருக்கின்றார்களாம்.

மகன்கள் அவர்களை கண்டு கொள்வதே இல்லை.இவர்களும் அவர்களிடம்
எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை.... இத்தனைக்கும் அவர் அங்கே தலைமை
ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கின்றார். மகள்களுக்கு
பணத்தேவை இருந்ததாம். அதனால் தானாகவே விருப்ப ஓய்வு பெற்று
அதில் வந்த பணத்தினை கொடுத்திருக்கின்றார்.

தற்போது வேலைக்காக அழைத்துவந்த எங்கள் நிறுவனத்திலிருந்த சகோதரியின் வீட்டருகேதான் இவரது மகள் வீடும்.

இங்கே Purchase வேலைக்கு ஆள் தேவை இருந்தது. எனவே அந்த பணிக்கு அவரை அமர்த்திக் கொண்டனர்...
 
எங்கள் நிறுவனத்திற்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வர 
எவ்வளவு தூரமென்றாலும் சைக்கிள்தான் உபயோகிக்க வேண்டும். 
பெட்ரோல் விலை உயர்வினால்தான் இது போன்றதொரு திட்டம்.

எங்கள் நிறுவனமும் எங்கள் MD-யின் வீடும் ஒரே பில்டிங்கிலேயே உள்ளது.
கொடுமை என்னவெனில் வீட்டிற்கு சமையலுக்கு கருவேப்பிலை தேவைப்பட்டால் கூட
MD-யின் மனைவி இவரைத்தான் கடைக்கு அனுப்புவார்..... இவ்வளவுக்கும் கடை 5  வீடுகள் தள்ளிதான் உள்ளது. வீட்டிலும் அவரது பையன்கள் கூட இருக்கின்றார்கள்.

வயதில் பெரியவர் என்ற மரியாதையும் இருக்காது. ஒரு ஆசிரியராக இருந்தவர் என்றுகூட நினைப்பதில்லை.  அவர்கள் இதுபோன்ற வேலை சொல்லும்போது அவரது முகத்தில் தெரியும் வேதனை அளவிட முடியாதது. 

பெற்ற பிள்ளைகளுக்காக எத்தனை காலம்தான் இப்படி கஷ்டப்படுவது....??

கடைசிக் காலத்தில் அவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்து கொடுக்க வேண்டிய பிள்ளைகளே அவர்களுக்கு பாரமாகி விடுகின்றார்கள்... !!

அப்புறம் முதியோர் இல்லங்கள் பெருகத்தான் செய்யும்....!!?!

பெற்றவர்கள் மனதை கஷ்டப் படுத்திவிட்டு அவரது மகன்களால் எப்படி சந்தோசமாக வாழ முடிகிறது என்றுதான் தெரியவில்லை........

தமிழ் வளர்ப்போம் .

என் இனிய தமிழ் மக்களுக்காக ,
வசந்த் அண்ணாவின் வழியில்  தமிழ் வளர்க்க
நாமளும் நம்மால் ஆனத செய்யணும்னு  ரூம் போடாத குறையா யோசிச்சப்ப....

நம்மோட கூட பிறக்காத உடன்பிறப்பான
கணிப்பொறி தொடர்பான பொருட்களை தமிழ் படுத்தலாமேன்னு
ஆங்கில அகராதிய கஷ்டப்பட்டு புரட்டி கண்டுபிடிச்சது....

Mother Board




PenDrive :-



CD Drive:



Hard Disk


Monitor:

Mouse:



இன்னும்  நிறைய சொல்லனும்னா இதெயெல்லாம் படிச்சு என்கிட்டே மனப்பாடம் பண்ணி சொன்னா மட்டும்தான்.....

(எங்களைலாம் ஏமாத்த முடியாது...)

Click Me!


சுதந்திர தினத்தை நினைவு கூறுவோம்

 









தாயின் மணிக்கொடி பாரீர்...
அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்..  
தாயின் மணிக்கொடி பாரீர்...

ஆகஸ்ட்-15

இந்த சுதந்திர தினத்தன்று , குழந்தைகளுக்கு ஞாயிற்றுக் கிழமையில் கூட விடுமுறை இல்லாமல் சீருடையை அணிந்துகொண்டு பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்...

அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு , இந்த ஆகஸ்ட் 15  ஞாயிற்றுகிழமை இல்லாமல் வேறு கிழமையில் வந்திருக்கக் கூடாதா ஒரு நாள் விடுமுறையாவது வந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு.

நான் ஐந்தாம் வகுப்பு வரையிலும் எங்கள் ஊரிலேயே உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன்.. அதன்பிறகு மேற்படிப்புகளுக்குதான் (.?) கிறிஸ்துவப் பள்ளிகளின் வாசம்

அப்போதெல்லாம் பள்ளியில் கொடி ஏற்றி அங்கே சாக்லேட் வாங்கியதும் பக்கத்திலுள்ள  அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓடுவோம்...

ஏனென்றால் அன்று மட்டும்தான் அந்த மாளிகைக்குள் எல்லோரும் உள்ளே நுழைய முடியும். மற்ற நாட்களில் சம்பந்தமில்லாதவர்கள் யாரும் செல்ல முடியாது.
உள்ளே ஒரு அழகான பூங்காவினைப் போல் இருக்கும். சில்லென்ற காற்றும், பசுமையும் ஏதோ வேறு பிரதேசம் வந்தது போல தோன்றும்....

இரண்டாவது காரணம் அங்கு எங்கள் பள்ளியில் கொடுத்ததை விட பெரிய பெரிய சாக்லேட்டுகளை கொடுப்பார்கள்.
இப்படி சின்ன வயதிலிருந்தே சுதந்திர தினம் என்றால் சாக்லேட் இலவசமாக கொடுக்கப் படும் நிகழ்வாகவே நம்மில் பலருக்கும் எண்ணம்.

அன்றைய தினம் மட்டும் பள்ளிகளில் நமது நாட்டின் விடுதலைக்காக பாடு பட்டவர்களை நினைவு கூறுவார்கள்.

கீழ்வகுப்புகளில் ஒரு பாரதியார் பாடலும், கொடிகாத்த குமரனைப் பற்றி ஒரு பாடமும் நாம் சுதந்திரம்   வங்கியதை ஞாபகப் படுத்த வைக்கப் பட்டிருக்கும்.


பொதிகை தொலைகாட்சியில் ரோஜா திரைப்படத்தினை மறுபடியும் ஒளிபரப்புச் செய்வார்கள்...

மற்ற டிவிக்களில்
இன்றைய சுதந்திர தின சிறப்பு  நிகழ்சிகள் அனைத்தையும் வழங்குபவர்கள்
யார் யாரென  ஸ்பான்சர்களை மட்டும் விளம்பரப் படுத்தி நமக்கு சுதந்திர தினத்தை நினைவு படுத்துவார்கள்

சுதந்திரப் போராட்டத்திலே கலந்துகொண்டு உயிரினைத் துறந்தவர்கள் ஏராளம்.
ஆனால் நமக்கு தெரிந்ததோ சிலருடைய பெயர்கள் தாம்...

ஆனால் அவர்களுக்காவது நாம் உரிய மரியாதையினைத் தருகின்றோமா என்பதுதான் கேள்வி.? 
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகள் இன்னும் பலர் நம் நாட்டில் இருகின்றார்கள்...

அவர்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அரசு அளிக்கும் உதவித் தொகையினைக் கூட பெற இயலாதவர்கள் எத்தனையோ பேர் இருகின்றார்கள்....

இங்கே 

இங்கே

க்ளிக்கி பாருங்கள்...

இதைபோல் நிறைய விஷயங்கள் வலையில் உள்ளன.

எது எப்படி இருந்தாலும் சரி....

அன்றைய தினமாவது நாம் நமது சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்கூட போதுமானதே.

டிஸ்கி:
 எங்க கம்பனில இன்னைக்கே சுதந்திர தினத்துக்காக சாக்லேட் கொடுதுட்டாங்கப்பா.  நாளைக்கு விடுமுறைங்கறதால. 


http://www.bringmeasandwich.com/images/CadburyDairyMilkTreatwisefrontrgb.jpgஇதே சாக்லேட்தான்.....


எல்லோரும் கோரசா  வந்தே மாதரம் பாடுங்க......

                            


 ஜெய் ஹிந்த் .



டிஸ்கி:

மேல உள்ள கொடி இங்கருந்து சுட்டது. வசந்த் அண்ணா ப்ளாக்க பார்த்து...

ஒரு நாளு..... ஒரு ஊர்ல...

ஒரு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பான பையனோட ஒரு நாள் பொழுதைப் பாருங்களேன்.

காலைல 10 மணிக்குலாம் சீக்கிரமே எழுந்து மேக் அப் பண்ணிக்கிட்டு சென்ட் அடிச்சுகிட்டு  (குளிக்காதத மறைக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கு )   கிளம்பி போறாரு...


காலைலேர்ந்து எத்தனை பேர சமாளிக்க வேண்டி இருக்குனு பாருங்களேன்..

10 மணிக்கு :

திருமலை நாயக்கர் மஹால் பக்கமா ஒதுங்குராறு ..எதுக்குனு பார்த்தா....?


ஒரு 12  மணி வாக்கில..

ஆசியாவுலேயே ரொம்ப பெருசான  தங்கம் தியேட்டருக்கு போறாரேன்னு  பார்த்தா

அங்க.....வித்அவுட்ல வந்து படம் பாக்க யார் கூட வந்திருக்கார்னு பாருங்களேன்...


படம் விட்டதும் பக்கத்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வேகமா ஓடி போயி அங்க 7C பஸ்ல ஏறி மாட்டான்பட்டிக்கு ஒரு டிக்கெட்னுலாம்  கேட்கல. அங்கயும் வித் அவுட்தாங்க..
ஒரு வழிய வந்து இறங்கி....
என்னனு பார்த்தா அந்த ஊர்ல


கோவில் திருவிழாங்க.....
இன்னும் காலைலேர்ந்து சாப்பிடல.. பசி வயித்த கிள்ளது....! ஆங்...என்ன பண்றது.....


ஹோய்......எடத்த  பிடிங்கடா....எடத்த  பிடிங்கடா...


அடுத்து....
காரணம் இல்லாம நம்மாளு இவ்ளோ தூரம் வருவாரா....


இதுக்குதான்.  இதுக்குதான். இதுக்குதாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தது. ....
சரி அடுத்த ஆட்டத்துக்கு போவோமா....!



சட்டைலாம் கலர் கலரா போட்டுக்கிட்டு
தாமிரபரணி தண்ணி குடுச்சு நான் வைகையிலே குளிச்சு வளந்தவன்னு
ஸ்டில்லப் பார்த்தீங்களா...!

நம்ம ஆளு இப்டி சுத்துறது கடைசில தெரிஞ்சு போச்சு.......


ஐயையோ காப்பாத்துங்க...காப்பாத்துங்க.........

 இந்த கதையின் கருத்து:

(இதுக்கு பேரு கதை , இதுக்கு கருத்து வேறயானு கேட்கப் படாது...) 

 பாருங்க...இவ்ளோ நடந்திருக்கு.நம்ம பையன் மாறவே இல்ல.
பொண்ணுங்க மட்டும்தான் வரிசையா மாறிகிட்டே இருக்காங்க.

So ............

பசங்க எப்பவும் மாறுரதே இல்லேங்க. ...இந்த பொண்ணுங்கதான்........?

(பொண்ணுங்க யாரும் கல்ல விட்டு என்ன எறியனும்னு நினைச்சா,  எனக்கு இந்த concept- sms பண்ணுன அந்த புண்ணியவான எறிஞ்சுக்கோங்கோ..வ்.....)

நாற்காலிக்கு சண்டை போடும் ..........

எங்க கம்பனில நேத்து ஒரு டிபார்ட்மெண்டுக்கு சும்மா உட்கார்ந்து தேய்க்கிறதுக்கு நாற்காலி  கம்மியா இருக்குனு சொல்லிட்டு  புதுசா நாலு நாற்காலி  வாங்கிட்டு வந்தாங்க.

கடை பேரு பார்த்தீங்களா... ...


ஆனா வாங்கிட்டு வந்ததும் நம்ம வெட்டி ஆபிசருங்க இருக்காங்கல்ல , புது நாற்காலி வந்திருக்குப்பானு ஆளாளுக்கு அதில உட்கார்ந்து அலப்பறை பண்ணிட்டு இருந்தானுக...
வந்த அன்னைக்கே அந்த நாற்காலி நஞ்சு பிஞ்சு போற அளவுக்கு அத கொடுமை படுத்துனானுங்க.

கடைசியா ஒரு VAO வந்தாருங்க.

அப்பதான் நம்ம பீமா வேலையா காட்டிட்டார்.....

  

அப்புறம் என்ன......

கெக்கே..! பிக்கேதான்.......!!!!!!

 இப்படி கெக்கே..! பிக்கே எல்லாம் எங்க MD  இல்லாதப்பதாங்க....




இந்த வார சினிமா"S'

நம்ம வசந்த் அண்ணா டிவி யில  இந்த மாதம் முதல் தேதி நண்பர்கள் தினமா கொண்டாடப் படுறதால இந்த வாரம் முழுவதும்........
                                
            திரைக்கு வந்து சில மாதங்களே ஆன

           புத்தம் புதிய அதிரடித் திரைப்படங்கள்.

இந்த சண்டே நண்பர்கள் தினம்கறதால அன்னைக்கு  மட்டும்  நம்ம  விஜய் நடிச்ச பிரண்ட்ஸ் படத்த எப்புடியாவது கஷ்டப்பட்டு பார்த்துடுங்க.
இல்லனா நம்ம சரத் நடிச்ச " நட்புக்காக " படத்தினையாவது  பார்க்கலாம். ..
.

 திங்கள் முதல் நமது ஸ்பெசல் திரைப்படங்கள் நம்ம வசந்த் அண்ணா டிவில...


திங்கள்:


செவ்வாய் :

                       
புதன் : -


வியாழன்:-



வெள்ளி:-

      

சனி:-

யம்மாடியோவ்..... இவ்வளவு படம் ஓட்டறதே பெரிசு....எங்க    MD - க்குத் தெரியாம இத கிரியேட் பண்றதுக்கு நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்ம்ம்...

அதனால ரொம்ப கஷ்டப்பட்டு நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன்....

படிச்சுட்டு  பின்னூட்டம்  போடாம போறவங்களுக்கு.....


"நீங்க நைட் தூங்கும் போது உங்க கண்ணு தெரியாம போகும்..."





எனக்கு பதில் தெரியாத சில கேள்விகள்.........

கருப்பு - ஒரு வண்ணம்தான.
வெள்ளை - ஒரு வண்ணம்தான .
அப்படினா Black & White TV-ல வர படத்த மட்டும் வண்ணப்படம்னு சொல்ல மாட்டேன்கறாங்க ஏங்க.....?

கேள்வி 2 :
 
கடுகை விட உருவத்தில பெரிசான  மிளக
குறு மிளகுனு சொல்றாங்க.
ஆனா கடுகை குறுங்கடுகுனு சொல்ல மாட்டேன்கிறாங்களே  ஏங்க.....?



கேள்வி 3 :

வாட்டர் சர்விஸ் னா வாட்டர் தான கொண்டு வாராங்க...

அப்படினா பயர் சர்விஸ்னா பயர் தான கொண்டு வரணும்.....

ஏங்க அவங்களும் வாட்டரே கொண்டு வராங்க...?


இன்னும் நிறைய கேள்விகள் ஸ்டாக் இருக்குதுங்கோ....!!!
ஆனா இதுக்குலாம் யாராவது பதில்  சொன்னீங்கன்னா
எல்லாத்தையும் கேட்கலாம்னு ஒரு முடிவுல இருக்கேனுங்கோ...!



இங்க கிளிக் பண்ணுங்க பணம் வரும்....!

ம் ஒன்றினைப் பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் அது நமக்கு கிடைத்தால் அதுவும்கூட நமக்கு பிச்சை போன்றதுதானே.







முதலில் எல்லாம் அஸ்ஸாம் , சிக்கிம் , சிங்கம் , புலி னு வித விதமான லாட்டரி சீட்டுகள் விற்று மக்களை சோம்பேறிகள் ஆக்கி கொண்டிருந்தார்கள்........

இப்போது காலம் முன்னேறி விட்டதாம். இன்டெர்நெட் யுகமாமே இது.

அதுனால ஆன்லைன்ல எல்லா வசதிகளுமே வந்துடுச்சே இது மட்டும் ஏன்டா பெண்டிங்க்னு நம்ம ஆளுங்களுக்கு உறுத்தி இருக்கும்போல 

ஆன்லைன் மணி மேகிங் பண்ணனுமா ..

இங்க கிளிக் பண்ணுங்க...

இதுல sign up பண்ணுங்க...   உங்களுக்கு வர விளம்பரங்கள கிளிக் பண்ணுனாலே பணம் உங்களுக்கு

நீங்க மட்டும் வந்தா 25 பைசாதான் உங்க அக்கவுண்டுக்கு.

உங்க நண்பர்களையும் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சா தலைக்கு 2.00 ரூபாய் தரோம் வாங்க வாங்க வாங்க வாங்க னு கூப்பிட்டாதான்  நாமலும் உடனே
அதுல ஒரு sign up பண்ணி பார்த்துடறம்ல....

 நிறைய பேரு ஆபீஸ்ல உட்கார்ந்துட்டுவேலை செய்றத விட இந்த மாதிரி இண்டர்நெட்ல
வெட்டியா பொழுது போக்கறதே பொழப்பா வெச்சுருப்பாங்க போல தெரியுது.... (என்னயலாம் கணக்குல சேர்த்துகப்படாது ஆமா....)