வரவேற்கின்றேன்...புது வருடத்தை

உங்கள் எல்லாரையும் போலவே பலவற்றிற்காக பலத்த நம்பிக்கையுடன் 
 வரவேற்கின்றேன் இந்த புதிய வருடத்தை..........

                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.....ஆமென்....

               சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது உள்ளத்தில் தோன்றினவைகள்..
நேரத்தினை சரியாக பயன்படுத்தாமையினால் கொஞ்சம் தாமதமாக இந்த பதிவு..........
 நாங்கள் ஹிந்து குடும்பம் என்றாலும் எனது சகோதரிகள் மற்றும் சகோதரன், நான் எல்லோரும் படித்து எல்லாமே கிறிஸ்துவப் பள்ளிகள்தான்.....(அதனாலதான் இப்படி அநியாயத்துக்கும் நல்லவனா இருக்கேன்...) 

         அதனால எங்களுக்கும் கிறிஸ்துவிற்கும் கூட நெருங்கிய சொந்தம் உண்டுன்னுலாம் பொய் சொல்லவில்லை...... ஆனால் பெரும்பான்மையான எங்களது நண்பர்கள் வட்டாரம் எல்லாம் கிறிஸ்துவர்கள்தான்.........

          ஹாஸ்டலில் படிக்கும் போது கிறிஸ்துமஸ் அரையாண்டுதேர்வு விடுமுறையில்தான் வரும்.... (இப்போ எங்க கம்பெனில இந்த விடு முறையெல்லாம் விட மாட்டேன்கறாங்கப்பா...!!!!)

          அனைத்து தேர்வுகளையும்  எழுதி முடித்ததும் மறு நாளில் இருந்து விடுமுறை ஆரம்பிக்கும்.... அன்று இரவு எங்கள் விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்....
அப்பொழுதான் எங்களுக்கு நாடகம் நடிக்க கான்செப்ட் கொடுப்பார்கள்... முழுதாக ரெண்டு மணி நேரம் கிடைக்கும் எங்களுக்கு.. அதற்குள் விடுதியை அலங்கரித்து கிறிஸ்துமஸ் மரம் நட்டு குடில் உருவாக்கி அதில் பெத்லகேமினையே கொண்டு வந்துவிடுவோம்....
          ரெண்டு மணி நேரத்தில் எங்களை தயார் படுத்திக் கொண்டு  நான்கு மணி நேர program செய்து விடுவோம்.... அன்று அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுப்பார்.... கேக்குகளை நண்பர்களின் முகத்தில் பூசி அட்டூழியம் செய்வோம்.. அன்று மட்டும்தான் எங்களால் விடுதியில் அப்படி நடந்து கொள்ள முடியும்.

            மற்ற நாட்களில் அந்த இடத்தில் விடுதி இருப்பதற்கு அடையாளமே இருக்காது... அவ்வளவு அமைதியாக இருக்கும்.ஏதோ பெரிய கட்டிடங்களாக  இருகின்றதே என்று பார்த்தால்தான் உண்டு..ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பிரம்புகள் பிய்ந்து போகும் .
 பள்ளிப் படிப்பினை முடித்த பிறகு அதுபோன்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே வந்து போயின.....

 http://www.travel247.tv/india/wp-content/uploads/2010/09/Oriyur-Ramanathapuram.jpg
 (நான் படித்த  ஊரிலுள்ள சர்ச்..புனித அருளானந்தர் திருத்தலம்...ஓரியூர்.)

           சில விஷயங்கள் அந்த மதத்திலே எனக்கு நிரம்பவும் பிடிக்கும்....
ஹிந்து மதத்தில் யாரேனும் இறந்து விட்டால் அந்த வீட்டுக்காரர்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவில் நிகழ்சிகளில் கூட கலந்து கொள்ளக் கூடாது. திருநீறு  வைக்க கூடாது.....
                  ஆனால் கிறிஸ்தவத்திலே  அப்படி இல்லை.  இறந்தவர்களின் உடலை ஆலயத்திற்க் குள்ளேயே  எடுத்துச் சென்று ஆண்டவரின் முன் வைத்து அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பார்கள். அந்த ஊர்காரர்கள் அனைவரும் அந்த இறந்தவரின் குடும்பத்தில் மன ஆறுதல் கிடைக்க ஆலயத்தில் சிறப்பு திருப்பலி செய்வார்கள்....
 
                          ஹிந்துக் கோவில்களில் ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர்  வந்துவிட்டால் அவருக்கு சிறப்பு தரிசனம் செய்ய வாய்ப்பு.... இதே எந்த சர்ச்சிலும் எவ்வளவும் பெரிய அதிகாரியாக இருந்தாலும் குறிப்பிட நேரத்திற்குத்தான்  திருப்பலி வைப்பார்கள்.  அதிலும்கூட எல்லா பொதுமக்களும் ஒன்று சேர்ந்துதான் பிரார்த்திப்பார்கள்...
அவர்கள் கிறிஸ்துவை தரிசிக்க வரிசையில் நிற்கத் தேவை இல்லை....சரியான நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு அவர்களது வேலையியோ கவனிக்கச் சென்றுவிடுவார்கள்.....

    ஆனால் கோவில்களிலோ அப்படி இல்லை... வரிசையில் நின்று ஒவொருவராக அர்ச்சகர் மந்திரம் சொல்லி திருநீறு வழங்கி முடிப்பதற்குள் கடவுளே கூட ஓய்வு எடுக்க கயிலை மலைக்கு சென்றுவிடுவார்......(என்ன கொடுமை சார் இது...)

தேவாலயத்தில் பாதிரியார் முன்னூறு இறைமக்களுக்கு கூட பதினைந்து நிமிடத்தில் அப்பத்தினை வழங்கி விடுகின்றார்...
ஆனால் நமது கோவில்களில் முப்பது பேர் திரு நீர் வாங்குவதற்குள் இரண்டு முறை நடை சாத்தி வேறு திறப்பார்கள். முப்பது பேரும் வழங்கும் தட்சணைகளை அர்ச்சகர்கள் தாங்கள் இடைக்கச்சையில் செருகவே சற்றுக் காலம் பிடிக்கும்....
இங்கே எந்த பாதிரியாருக்கும் அப்பம் வழங்கும் போது அவருக்கு மக்கள்S டிப்ஸ்  கொடுத்து நான் பார்த்ததில்லை..
இது போல நிறைய பேசிக் கொண்டே சென்றால் கடைசியில் மதக் கலவரத்தை தூண்டுகிறேனோ என்று கூட தோன்றினாலும்  தோன்றும்....

அந்த மதத்திலுள்ள நல்ல விசயங்களை எடுத்துக் கொள்ளலாமே என்பதுதான் என் விருப்பம்......மற்றபடி nothing.......
படிங்க... ஒரு சின்ன பையன் ஏதோ புலம்பிருக்கான்னு  நினச்சு இதோடு மறந்துட்டு போயிடுங்க...... Don 't Get be Seriously ... 

பிதா  சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே..... ஆமென்....