சுதந்திர தினத்தை நினைவு கூறுவோம்

 









தாயின் மணிக்கொடி பாரீர்...
அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்..  
தாயின் மணிக்கொடி பாரீர்...

ஆகஸ்ட்-15

இந்த சுதந்திர தினத்தன்று , குழந்தைகளுக்கு ஞாயிற்றுக் கிழமையில் கூட விடுமுறை இல்லாமல் சீருடையை அணிந்துகொண்டு பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்...

அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு , இந்த ஆகஸ்ட் 15  ஞாயிற்றுகிழமை இல்லாமல் வேறு கிழமையில் வந்திருக்கக் கூடாதா ஒரு நாள் விடுமுறையாவது வந்திருக்குமே என்ற அங்கலாய்ப்பு.

நான் ஐந்தாம் வகுப்பு வரையிலும் எங்கள் ஊரிலேயே உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன்.. அதன்பிறகு மேற்படிப்புகளுக்குதான் (.?) கிறிஸ்துவப் பள்ளிகளின் வாசம்

அப்போதெல்லாம் பள்ளியில் கொடி ஏற்றி அங்கே சாக்லேட் வாங்கியதும் பக்கத்திலுள்ள  அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓடுவோம்...

ஏனென்றால் அன்று மட்டும்தான் அந்த மாளிகைக்குள் எல்லோரும் உள்ளே நுழைய முடியும். மற்ற நாட்களில் சம்பந்தமில்லாதவர்கள் யாரும் செல்ல முடியாது.
உள்ளே ஒரு அழகான பூங்காவினைப் போல் இருக்கும். சில்லென்ற காற்றும், பசுமையும் ஏதோ வேறு பிரதேசம் வந்தது போல தோன்றும்....

இரண்டாவது காரணம் அங்கு எங்கள் பள்ளியில் கொடுத்ததை விட பெரிய பெரிய சாக்லேட்டுகளை கொடுப்பார்கள்.
இப்படி சின்ன வயதிலிருந்தே சுதந்திர தினம் என்றால் சாக்லேட் இலவசமாக கொடுக்கப் படும் நிகழ்வாகவே நம்மில் பலருக்கும் எண்ணம்.

அன்றைய தினம் மட்டும் பள்ளிகளில் நமது நாட்டின் விடுதலைக்காக பாடு பட்டவர்களை நினைவு கூறுவார்கள்.

கீழ்வகுப்புகளில் ஒரு பாரதியார் பாடலும், கொடிகாத்த குமரனைப் பற்றி ஒரு பாடமும் நாம் சுதந்திரம்   வங்கியதை ஞாபகப் படுத்த வைக்கப் பட்டிருக்கும்.


பொதிகை தொலைகாட்சியில் ரோஜா திரைப்படத்தினை மறுபடியும் ஒளிபரப்புச் செய்வார்கள்...

மற்ற டிவிக்களில்
இன்றைய சுதந்திர தின சிறப்பு  நிகழ்சிகள் அனைத்தையும் வழங்குபவர்கள்
யார் யாரென  ஸ்பான்சர்களை மட்டும் விளம்பரப் படுத்தி நமக்கு சுதந்திர தினத்தை நினைவு படுத்துவார்கள்

சுதந்திரப் போராட்டத்திலே கலந்துகொண்டு உயிரினைத் துறந்தவர்கள் ஏராளம்.
ஆனால் நமக்கு தெரிந்ததோ சிலருடைய பெயர்கள் தாம்...

ஆனால் அவர்களுக்காவது நாம் உரிய மரியாதையினைத் தருகின்றோமா என்பதுதான் கேள்வி.? 
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகள் இன்னும் பலர் நம் நாட்டில் இருகின்றார்கள்...

அவர்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அரசு அளிக்கும் உதவித் தொகையினைக் கூட பெற இயலாதவர்கள் எத்தனையோ பேர் இருகின்றார்கள்....

இங்கே 

இங்கே

க்ளிக்கி பாருங்கள்...

இதைபோல் நிறைய விஷயங்கள் வலையில் உள்ளன.

எது எப்படி இருந்தாலும் சரி....

அன்றைய தினமாவது நாம் நமது சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்கூட போதுமானதே.

டிஸ்கி:
 எங்க கம்பனில இன்னைக்கே சுதந்திர தினத்துக்காக சாக்லேட் கொடுதுட்டாங்கப்பா.  நாளைக்கு விடுமுறைங்கறதால. 


http://www.bringmeasandwich.com/images/CadburyDairyMilkTreatwisefrontrgb.jpgஇதே சாக்லேட்தான்.....


எல்லோரும் கோரசா  வந்தே மாதரம் பாடுங்க......

                            


 ஜெய் ஹிந்த் .



டிஸ்கி:

மேல உள்ள கொடி இங்கருந்து சுட்டது. வசந்த் அண்ணா ப்ளாக்க பார்த்து...

2 கருத்துகள்:

பெசொவி சொன்னது…

உடன்படுகிறேன்!

R.பூபாலன் சொன்னது…

வந்துட்டான்யா வந்துட்டான்...(


ரொம்ப நன்றி...அய்யா....

நீங்கதான் எனோட பதிவ படிச்ச மூன்றாவது நபர்...

உங்களோட மொக்கைகள் நிறைய படிச்சுருக்கேன்.....


நல்லா தெரியல...
-
-
-
-
--
-
-

இந்த மாதிரி கம்மியா மொக்கை போடுறது.... (எப்டி..உங்களுக்கே..)

ரொம்ப நன்றி...........