இங்க கிளிக் பண்ணுங்க பணம் வரும்....!

ம் ஒன்றினைப் பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் அது நமக்கு கிடைத்தால் அதுவும்கூட நமக்கு பிச்சை போன்றதுதானே.







முதலில் எல்லாம் அஸ்ஸாம் , சிக்கிம் , சிங்கம் , புலி னு வித விதமான லாட்டரி சீட்டுகள் விற்று மக்களை சோம்பேறிகள் ஆக்கி கொண்டிருந்தார்கள்........

இப்போது காலம் முன்னேறி விட்டதாம். இன்டெர்நெட் யுகமாமே இது.

அதுனால ஆன்லைன்ல எல்லா வசதிகளுமே வந்துடுச்சே இது மட்டும் ஏன்டா பெண்டிங்க்னு நம்ம ஆளுங்களுக்கு உறுத்தி இருக்கும்போல 

ஆன்லைன் மணி மேகிங் பண்ணனுமா ..

இங்க கிளிக் பண்ணுங்க...

இதுல sign up பண்ணுங்க...   உங்களுக்கு வர விளம்பரங்கள கிளிக் பண்ணுனாலே பணம் உங்களுக்கு

நீங்க மட்டும் வந்தா 25 பைசாதான் உங்க அக்கவுண்டுக்கு.

உங்க நண்பர்களையும் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சா தலைக்கு 2.00 ரூபாய் தரோம் வாங்க வாங்க வாங்க வாங்க னு கூப்பிட்டாதான்  நாமலும் உடனே
அதுல ஒரு sign up பண்ணி பார்த்துடறம்ல....

 நிறைய பேரு ஆபீஸ்ல உட்கார்ந்துட்டுவேலை செய்றத விட இந்த மாதிரி இண்டர்நெட்ல
வெட்டியா பொழுது போக்கறதே பொழப்பா வெச்சுருப்பாங்க போல தெரியுது.... (என்னயலாம் கணக்குல சேர்த்துகப்படாது ஆமா....)


கருத்துகள் இல்லை: